எமது பயணம் பற்றிய ஒரு பார்வை
யாழ். இந்து மகளிர் கல்லூரியின் அடித்தளமானது, யாழ் சைவ பரிபாலன சபையின் தொன்மையான பணியில், 1888-ஆம் ஆண்டு முதல் வேரூன்றியுள்ளது. இந்த சபை, இலங்கை முழுவதிலும் இந்து மதத்தின் உயரிய பண்பாடுகள் மற்றும் தமிழ் கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் நிறுவப்பட்டு யாழ். இந்து கல்லூரியின் நிர்வாக பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது. 1902-ஆம் ஆண்டு இந்துக்கல்லூரி அதிகாரசபையானது நிறுவப்பட்டு அதன்கீழ் யாழ் இந்துக்கல்லூரி நிர்வாகம் கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து, யாழ் இந்து மகளிர் கல்லூரியின் நிர்வாகமும் இணைக்கப்பட்டது. பின்னர் 1961 இல் யாழ் இந்து கல்லூரி மற்றும் யாழ் இந்துமகளிர் கல்லூரி இரண்டும் அரசாங்க நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு அரச பள்ளிகளாக இயங்கி வந்தன.
பயணத்தின் தொடக்கம்
1935-ஆம் ஆண்டு, அப்போதைய அதிபராக இருந்த திரு. ஏ. குமாரசாமி அவர்கள், ஆண்கள் பள்ளியாக இருந்த யாழ். இந்து கல்லூரியில் பெண்களையும் சேர்க்கத் தொடங்கினார். இம்முயற்சி பெண்கள் கல்விக்கான புதிய பாதைக்கு வழிவகுத்தது. பெண்களுக்கு தனித்துவமான கல்வி சூழல் தேவை என்பதை உணர்ந்த சமூக நலன்விரும்பிகள், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 1943-ஆம் ஆண்டு புரட்டாதி 10-ஆம் திகதி, வள்ளல் திரு. சிவகுருநாதர் பொன்னுசாமியின் “பொன்னாலயம்” இல்லத்தில், 8 ஆசிரியர்களும் 110 மாணவிகளும் கொண்ட அமைப்பாக யாழ். இந்து மகளிர் கல்லூரி தனது பயணத்தைத் தொடங்கியது. ஆரம்பத்தில் 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட்டன. ஒரு சிறிய விடுதி அமைக்கப்பட்டதன் மூலம் தொலை தூரங்களிலிருந்து வரும் மாணவிகளுக்கும் கல்வி கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. 1944-ஆம் ஆண்டு, முதல் பெண் அதிபராக செல்வி காயத்ரி பொன்னுத்துரை (பின்னர் திருமதி காயத்ரி கணேசன்) நியமிக்கப்பட்டார். மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்ததனால், பள்ளி தற்காலிகமாக யாழ். இந்து கல்லூரி மைதானத்திற்கு மாற்றப்பட்டது. அச்சமயம் திருமதி காயத்ரி கணேசன் தனிப்பட்ட சில காரணங்களுக்காக பதவி விலக நேர்ந்ததையடுத்து, அவ்விடத்தை நிரப்ப இந்தியாவைச் சேர்ந்த அர்ப்பணிப்புள்ள கல்வியாளரான திருமதி முத்து அச்சையா அவர்கள் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டார். அவரின் வழிகாட்டுதலில், பள்ளியின் கல்வி அமைப்பு விரிவுபடுத்தப்பட்டு, சிரேஷ்ட தராதரப்பதரதிரம் வரை வகுப்புகள் உயர்த்தப்பட்டன.
பயணத்தின் வளர்ச்சி
இதற்கிடையில் 1941-ஆம் ஆண்டு, இந்து மத சமூகப் பணியாளரான திருமதி விசாலாட்சி அம்மையார் சிவகுருநாதர், அவர்கள் அரசடி வீதியில் உள்ள தமக்கே உரித்தாக இருந்த 24 பரப்பு “நடுத்தோட்டம்” காணியை கல்லூரிக்கு என அன்பளிப்பு செய்தார். அவர்களே நமது கல்லூரி ஸ்தாபகர் என்னும் பெருமையையும் பெற்றார். அதுமட்டுமன்றி அவரது கணவர் திரு. ராமலிங்கம் சிவகுருநாதர் மற்றும் மருமகள் திருமதி வள்ளியம்மாள் சிவகுரு ஆகியோர் இணைந்து, தமது 16 பரப்பு காணியை நன்கொடியாக தந்து உதவினார்கள். இராஐவரோதய விநாயகர் ஆலயத்தை உள்ளடக்கியதாக அமைந்த இந்நிலப்பரப்பு எமது கல்லூரிக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். யாழ். இந்து மகளிர் கல்லூரியானது, புரட்டாதி 7, 1945 அன்று, அதிகாரப்பூர்வமாக அரசடி வீதியில் உள்ள புதிய வளாகத்தில் வேரூன்றியது. அதே நாளில், யாழ். இந்து கல்லூரி அதிகார சபையின் முகாமையாளர் சேர் வைதியலிங்கம் துரைசாமி அவர்களால், விஞ்ஞான ஆய்வகத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் நடந்தேறியது. படிப்படியாக, பள்ளியின் மகுட வாசகம், பாடசாலை கீதம், கொடி, சீருடை மற்றும் கழுத்துப்பட்டி ஆகியவை, எங்கள் அடையாளம் மற்றும் பெருமையின் சின்னம் என உருவெடுத்தது. ஸ்தாபிக்கப்பட்ட நாள் முதல் நான்காம் வகுப்பையே ஆரம்ப வகுப்பாக கொண்ட கல்லூரியில், 1968-ஆம் ஆண்டு முதல் முதலாம் வகுப்பிலிருந்து மாணவிகளை சேர்க்க தொடங்கினார்கள். பின்னர் 1978-ஆம் ஆண்டு, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள ஆரம்ப வகுப்புகள் தனியாக்கப்பட்டு, யாழ். இந்து மகளிர் ஆரம்பப்பாடசாலை என்ற பெயரில் யாழ். இந்து மகளிர் கல்லூரிக்கு அருகில் நிறுவப்பட்டது. இந்த எளிய தொடக்கத்திலிருந்து, யாழ். இந்து மகளிர் கல்லூரி, கல்வி சிறப்பு மற்றும் பண்பாட்டு பெருமை மூலம் இளம்பெண்களை வலுப்படுத்துவதில் முன்னணி கல்வி நிலையமாக மலர்ந்துள்ளது.
Our Beginning
The roots of our school trace back to the founding of the “ Saiva Paripalana Sabhai ” in Jaffna in 1888, established with the mission of revitalizing Hindu values and Tamil culture, both in Jaffna and across Sri Lanka. In 1902, the " Inthu kalluri athigara sabai " was established, and the administration of the Jaffna Hindu College was brought under it. Subsequently, the administration of the Jaffna Hindu Ladies College was also merged. In 1961, both Jaffna Hindu College and Jaffna Hindu Ladies’ College were brought under government administration and have since been functioning as government schools. In 1935, a significant milestone was achieved when Mr. A. Cumaraswamy , the then Principal of Jaffna Hindu College, began admitting girls into what had traditionally been a boys’ school. Recognizing the growing need for a dedicated space for girls’ education, the community and well-wishers in the area took initiative.
Our Journey
Jaffna Hindu Ladies College was founded on 10th September 1943 with a vision to provide quality education for girls rooted in Hindu values and Tamil culture. The college began its journey at “ Ponnalayam ,” the home of philanthropist Mr. Sivagurunathar Ponnusamy with just 8 teachers and 110 students. In its early years, the college offered classes from Grade 4 to Grade 8. A small hostel was also established to support young girls coming from distant areas, reflecting the school’s commitment to accessibility and care. In 1944, the first independent female principal, Ms. Gayathri Ponnuthurai (later known as Mrs. Gayathri Ganesan), was appointed. As enrollment increased, the college was temporarily relocated to the grounds of Jaffna Hindu College on 27th February 1944. Shortly after, Ms. Gayathri stepped down for personal reasons, and the school welcomed Ms. Muththu Achchaiya, a dedicated educator from India, who was recruited on a contractual basis.Under her leadership, the academic structure of the school was significantly expanded, offering classes up to the G.C.E. Advanced Level, laying a strong foundation for academic excellence that continues to this day Meanwhile, in 1941, the founder of Jaffna Hindu Ladies’ College (JHLC) , Mrs . Visaladchy Ammal Sivagurunathar , a well-known Hindu religious social worker of the thirties, forties and fifties, generously donated a parcel of land located at “ Naduththoddam ” on Arasady Road to support the growth of the school. Her husband, Mr. Ramalingam Sivagurunathar, along with his niece, Mrs. Valliammal Sivaguru, also contributed additional land to the college, which included the premises of the Rajavarothaya Pillaiyar Temple, which has blessed us with Pillaiyar’s protection and wisdom from the very beginning. On 7th September 1945, JHLC officially relocated to its new site on Arasady Road. On the same day, our Manager, Sir Vaitialingam Duraiswamy, laid the foundation stone for the science laboratory during a modest ceremony attended by Board Members, the Principal, college staff, students, and well-wishers. The school motto along with the anthem, flag, and tie, gradually took shape as symbols of our identity and pride.From the date of its establishment, the college had Grade Four as the beginning class. However, from 1968 onwards, students were admitted starting from Grade One. Later, in 1978, the primary classes from Grade One to Grade Five were separated and established near Jaffna Hindu Ladies’ College under the name 'Jaffna Hindu Ladies’ Primary School. From these humble beginnings, Jaffna Hindu Ladies College has blossomed into a leading school dedicated to empowering young women through academic excellence and cultural pride.